தமிழ்வழி பாடத்தில் மேற்கல்வியை முடித்த மாணவர்களுக்கு மார்ச் 1 ஆம் தேதி ஆசிரியர் வேலை

தமிழ்வழி பாடத்தில் மேற்கல்வியை முடித்த மாணவர்களுக்கு மார்ச் 1 ஆம் தேதி ஆசிரியர் வேலை

P KAMALANATHAN

சுல்தான் இட்ரிஸ்(UPSI) கல்வியல் பல்கலைக்கழக பட்டதாரிகளின் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டதை தொடர்ந்து கல்வி துணை அமைச்சர் டத்தோ P.கமலநாதன் ஒரு பத்திரிக்கை செய்தி வெளிடிட்டார்.

2014ம் மற்றும் 2015ம் ஆண்டு சுல்தான் இட்ரிஸ் கல்வியல் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி பாடத்தில் மேற்கல்வியை முடித்த மாணவர்கள் வேலை பணியமர்த்தப்படுவதில் பிரச்சனையை எதிர்நோக்கியிருந்தனர். இதனை கலைவதற்காக கல்வித் துணை அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்மொண்ட பிறகு எதிர்வரும் மார்ச் 1 ஆம் தேதி இப்பிரச்சனையை எதிர்நோக்கிய அனைத்து மாணவர்களும் பணியமர்த்தப்ப்டவிருக்கின்றனர்.

தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிப் பாடத்தில் பட்டம்பெற்ற 52 ஆசிரியர்கள் அனைவருக்கும் பணியிட வாய்ப்பு வழங்கப்படுள்ளது. 2014 இல் ஆசிரியர் பட்டப்படிப்பை முடித்த 34 மாணவர்களுக்கும் 2015 இல் பட்டப் பயிற்சியை முடித்த 18 ஆசியர்களுக்கும் நாட்டிலுள்ள இடைநிலைப்பள்ளிகளில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படுள்ளது என கல்வித் துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இறுதியில் கல்வி அமைச்சின் பள்ளிப் பிரிவு மற்றும் மனிதவள பிரிவின் உயர் அதிகாரிகளுடன் பல முறை பேச்சு வார்த்தை நடத்தி இப்பிரச்சனைக்கான தீர்வினை உடனடியாக எடுக்குபடி அவர்களிடன் எடுத்துரைத்துள்ளார். அதுமட்டுமின்றி இப்பிரச்சனையை எதிர்நோக்கிய மாணவர்களை பலமுறை சந்தித்து நிலவரத்தையும் எடுத்துக் கூறியுள்ளார். அதன் பயனாக, இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் 34 மாணவர்களுக்கு இடைநிலைப் பள்ளியில் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட்டது. எஞ்சியிருந்த 18 மாணவர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதத்தில் பணியைத் தொடங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என டத்தோ ப.கமலநாதன் தெரிவித்தார்.

ஆனவே. ஆசிரியர் பணியத் தொடங்கவிருக்கும் இப்பயிற்சி ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளைக் கூறியதோடு ஆசிரியப் பணியைச் சிறப்பாக மேற்கொண்டு நாட்டிற்கு தேவையான சிறந்த மார்த மூலதனத்தை வார்த்தெடுக்க பாடுபடுமாறு கேட்டுக் கொண்டார்.