ம.இ.காவின் ஏற்பாட்டில் நடைபெற உள்ள இளையோர் மேம்பாட்டு கண்காட்சி 2017 பற்றி அறிமுகம் மற்றும் விளக்க கூட்டம் நேற்று 28/02/2017 நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுகாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர். ச.சுப்ரமணியம் மற்றும் ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவரும் விழா ஏற்பாட்டு தலைவருமான டத்தோ சி.சிவராஜ் ஆகியோர் கலந்துகொண்டு இளையோர் மேம்பாட்டு கண்காட்சி பற்றி விளக்கி கூறினர். நிகழ்ச்சியின் முடிவில் அளிக்கப்பட்ட செய்தியாளர் குறிப்பு பின்வருமாறு. நிகழ்ச்சியில் நகர்புற மேம்பாடு வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தன் ஸ்ரீ ஹாஜி நொ பின் ஓமார் கலந்துகொண்டார்.
இன்றைய மலேசிய இளைஞர்களின் எண்ணங்கள் பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவர் முக்கியமாக கல்வி மற்றும் வேலை வாய்ப்பு. மலேசியா எத்தகைய பொருளாதார வளர்ச்சியை நோக்கி தயாராகவேண்டும் என்பதும் இதில் அடக்கம். ஒரு நல்ல வேலையும் மதிப்பான வாழ்வும் பெற எல்லோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இந்த குறிக்கோளை அடைய பொருளாதார முன்னோற்றத்தை நோக்கி ஒரு விரிவான அணுகுமுறை தேவை. இதை நோக்கமாக கொண்டே இளையோர் மேம்பாட்டு கண்காட்சி 2017 துவக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இந்த கண்காட்சியை இன்று டத்தோஸ்ரீ டாக்டர்.ச.சுப்ரமணியம் இன்று அறிமுகப்படுத்தினார். இந்த கண்காட்சி 2017 மே மாதம் 6 மற்றும் 7 தேதிகளில் கோலாலம்பூர் செண்ட்ரல் திறந்த வெளி கார் பார்க்கிங்கில் இரண்டு நாளும் காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நடைபெறும்.
நிகழ்ச்சியில் பேசிய ஏற்பாட்டு தலைவர் டத்தோ சி.சிவராஜ் கூறும்போது “நிறைய வேலைவாய்ப்புகள் பல நிறுவனங்கள் வழங்கினாலும் இளைஞர்களிடையே வேலையில்லா திண்டாட்டம் ஒரு பெரிய பிரச்சனையாக உருவாகியுள்ளது. இதையும் தாண்டி மலேசியாவில் வேலை வாய்ப்பு பற்றி மிக முக்கியமான பிரச்சனை வேலை கிடைக்கவில்லை என்பதல்ல விரும்பிய வேலை கிடைப்பதில்லை என்பதுதான். அனைத்து பிரச்சனைக்கும் கல்வி-வேலை – மலிவு விலையில் வீடு – நிதி என ஒரே இடத்தில் தீர்வு என்ற இலக்கை நோக்கி அனைவரும் நகர இது ஒரு முயற்சி.
[vsw id=”W8WRHj7pxok” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]
நிகழ்ச்சியில் பேசிய சுகாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச்.சுப்ரமணியம் கூறும்போது “சமுதாயத்திற்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நாட்டின் இளைய சமுதாயம் படிப்பு, வேலைவாய்ப்பு, பண உதவி மற்றும் மலிவு விலை வீடுகள் பெற உதவிடவே இந்த முயற்சியாகும். போட்டி நிறைந்த வேலை வாய்ப்பு சூழலுக்கு நமது பட்டதாரி இளைஞர்கள் தயார் செய்தாக வேண்டும்.
#YouthOutreachExpo2017