மலேசியாவில் மலேசிய இந்திய மக்களை பாதிக்கும் பிரச்சனைகளை சிறப்பாகவும் வேகமாகவும் தீர்த்து வைக்க ஏதுவாக அரசாங்கம் நாடு முழுதும் மேலும் ஒன்பது சிறப்பு நடைமுறைப்படுத்தல் செயலணி (SITF) சேவை மையம் கிளைகள் நிறுவ உள்ளது.
ம.இ.கா தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்ரமணியம் இதை பற்றி கூறுகையில் முதல் கிளை ஈப்போ, பேராக்கில் திறக்கப் பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஜோகூர், மலாக்கா, நெகரி செம்பிலன், சிலாங்கூர், பாகாங், பேராக், பினாங்கு, கெடா உள்ளிட்ட ஒன்பது இடங்களில் இத்தகைய சேவை மையங்கள் துவங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.