டிசம்பர் 18, அமெரிக்க குடியுரிமை இன்றி அங்கு தங்கி பணிபுரிய விரும்பும் வெளிநாட்டினருக்கு 85 ஆயிரம் ‘எச்1பி விசா’ வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த எண்ணிக்கையை 70 ஆயிரமாக குறைக்கக் கோரி அந்த நாட்டின்
பாராளுமன்றத்தில் 2 எம்.பி.க்கள் மசோதா தாக்கல் செய்துள்ளனர். இது சட்டமானால், இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று பணியாற்ற விரும்பும் தகவல் தொழில் நுட்பத் துறையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என
எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்திய தகவல் தொடர்பு நிறுவனங்கள் விசா கட்டணமாக ஆண்டுக்கு 7 கோடி டாலர் முதல் 8 கோடி டாலர் வரை (சுமார் ரூ.469 கோடி முதல் 536 கோடி வரை) செலுத்தி வருகின்றன
என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை எச்1பி விசா கட்டணமாக 2 ஆயிரம் டாலர் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது. விசா கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது இந்திய-அமெரிக்க உறவில் பாதிப்பினை ஏற்படுத்தும் என
அமெரிக்க பாராளுமன்ற தலைவர்களிடம் ஜனாதிபதி மாளிகை கவலை தெரிவித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் குடியரசு கட்சியினர் பெரும்பான்மையாக உள்ளதால், இந்த கவலையை பொருட்படுத்தாமல்
விசா கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி உள்ளனர்.