என் தமிழ்

Online Tamil News Malaysia

ஜி.வி.பிரகாஷ்-ஆனந்தி ஜோடி மீண்டும் புதிய படம்

Online Tamil News Malaysia

டிசம்பர் 16, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் ஜி.வி.பிரகாஷ்-ஆனந்தி ஜோடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. தற்போது இந்த ஜோடி புதிய படம் மூலம் இணையவுள்ளது. ஜி.வி.பிரகாஷை வைத்து ‘டார்லிங்’ என்ற வெற்றி படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இந்த படத்தை இயக்க இருக்கிறார். லைக்கா புரொடக்‌ஷன் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

Scroll to Top