டிசம்பர் 11, அமெரிக்காவில் வடமேற்கு பசிபிக் பகுதியில் தொடர் சூறாவளி வீசியது. கன மழையும் பெய்தது. இதன் காரணமாக அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. ஓரிகன் மாகாணத்தில், போர்ட்லேண்ட் நகரில் கடந்த 3 நாட்களில் 5 அங்குல அளவுக்கு மழை பெய்துள்ளது. சியாட்டிலிலும் பெருமழை பெய்துள்ளது. வாஷிங்டன் மாகாணத்திலும் பலத்த மழை காரணமாக கவர்னர் ஜே இன்ஸ்லீ நெருக்கடி நிலையை பிரகடனம் செய்துள்ளார். போர்ட்லேண்ட் நகரில் மட்டும் மழைக்கு 2 பெண்கள் பலியாகி உள்ளனர். அவர்களில் 60 வயதான பெண், தனது வீட்டின் மீது மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் சிக்கி பலியாகி உள்ளார். மற்றொரு பெண் காரில் பயணம் செய்தபோது வெள்ளம் அடித்துக்கொண்டு போய் விட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் மின் இணைப்பு துண்டிப்பால் இருளில் தவிப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
Previous Post: தனுஷின் தங்கமகன் கலக்கும் டிரைலர்