சமீபத்தில் நாட்டின் பல்வேறு பகுதியில் செய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் அதனை தொடர்ந்து ஏற்பட்ட இழப்பையும் தொடர்ந்து பின் வரும் காலங்களில் அத்தகைய சூழலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து வெள்ளப்பேரிடர் விழிப்புணர்வு கருத்தரங்கம் 28/11/2015 அன்று பகாங்கில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கினை செனேட்டர் மற்றும் பகாங் மாநில ம.இ.கா தலைவர் டத்தோ R. குணசேகரன் அதிகாரபூர்வமாக துவக்கி வைத்தார். கருத்தரங்கில் பகாங் மாநில ம.இ.கா துணைத் தலைவர் டத்தோ A. சிவலிங்கம், பகாங் மாநிலத்தின் ம.இ.கா தொகுதி தலைவர்கள், பகாங் மாநில ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் திரு. S. சிவகுமரன், பகாங் மாநிலத்தின் ம.இ.கா இளைஞர் பிரிவு தொகுதி தலைவர்கள், பகாங் மாநில ம.இ.கா மகளிர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் செல்வி. இன்பவள்ளி, பகாங் மாநில ம.இ.காமகளிர் பிரிவு தொகுதி தலைவிகள் பங்கேற்றனர்.
கருத்தரங்கில் தீயணைப்புதுறை அதிகாரி, சமூக நலத்துறை அதிகாரி, காவல் துறை அதிகாரி, பொதுப்பணி மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கலந்துகொண்டு வெள்ளப்பேரிடர் காலத்தில் சேதங்களை தவிர்க்க கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றி விளக்கினர்.