நவம்பர் 24, தேசிய வகை ரெஞ்சோக் தமிழ்ப்பள்ளி, காராக்,பெந்தோங்,பகாங்-இன் முன்னாள் மாணவர்களின் இயக்கம் மிக சிறப்பாக ஒரு சந்திப்பை தாம் பயின்ற பள்ளியில் நடத்தினர். பெரும்பாலான முன்னால் மாணவர்கள் 80-ஆம் ஆண்டிற்கு மேற்பட்டவர்களாக இருந்தனர். இந்த சந்திப்பு இவர்களிடையே ஒரு சிறந்த நெருக்கத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் வகையிலே அமைந்தது. இந்த சிறந்த சந்திப்பில் ம.இ.கா பகாங் மாநில தலைவரும் ம.இ.கா உச்சமண்ற உறுப்பினருமான மாண்புமிகு செனட்டர் டத்தோ இரா. குணசேகரன் அவர்கள் உரையாற்றி சிறந்து வைத்தார். மலேசிய பிரதமர், மாண்புமிகு டத்தோ ஸ்ரீ நஜிப் துன் இரசாக் அவர்கள் தம் முயற்சியிலும் அக்கறையிலும் மலேசியாவில் உள்ள அனைத்து தமிழ் பள்ளிக்கூடத்திற்கு பலவகையில் உதவிசெய்து கொண்டிருக்கிறார்,என்று தமது உரையில் பேசினார். மேலும், இக்காலத்தில் இயக்கத்தில் உள்ள தலைவர்கள் சமுதாய சிந்தனையோடு தெரிந்து தெளிந்து செயல்படவேண்டும் என்றும் தமது உரையில் பேசினார் டத்தோ குணசேகரன் அவர்கள். இப்பள்ளி முன்னால் மாணவர்களின் இயக்கத்திற்கு அரசாங்க மாணியமாக ரி.ம. 5,000.00 வழங்கினார்.
Previous Post: விஜய் படத்தின் பெயர் 26 ஆம் தேதி வெளியிடப்படும்
Next Post: மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படுமா?