நவம்பர் 19, பாரீஸ் தாக்குதலுக்கு மூளையாக இருந்து தாக்குதலை செயல்படுத்திய அப்துல் ஹமீது அபாவுத் உள்ளிட்ட தீவிரவாதிகள், பாரீஸ் நகரின் புறநகரான செயின்ட் டெனிஸ் என்ற இடத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் பதுங்கி இருப்பதாக பிரான்ஸ் தீவிரவாத தடுப்பு போலீசாருக்கு உளவு தகவல் கிடைத்தது. உளவு தகவலை தொடர்ந்து, பல லாரிகளில் ஆயுதம் தாங்கிய தீவிரவாத தடுப்பு போலீஸ் படையினரும், ராணுவ வீரர்களும் அங்கு நேற்று விரைந்தனர். தீவிரவாதிகள் இருந்த வீட்டை போலீஸ் படை சுற்றிவளைத்தது. அப்போது இருதரப்பு இடையே பலமணி நேரம் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒருபெண் உள்பட 2 பேர் பலியாகினர். 7 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட மற்றும் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகள் பாரீஸ் நகரில் புதிய தாக்குதலுக்கு தயாராக இருந்துஉள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது
பிரான்ஸில் துப்பாக்கி சூடு தாக்குதல்
