நவம்பர் 12, பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்தில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று (வியாழக்கிழமை) இங்கிலாந்து புறப்பட்டு செல்லும் அவருக்கு, அங்கு சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணி எலிசபெத், பிரதமர் மோடிக்கு மதிய விருந்து அளித்து கவுரவிக்கிறார். இந்த பயணத்தின்போது இங்கிலாந்து பாராளுமன்றத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி, பின்னர் வெம்லே மைதானத்தில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் பேசுகிறார். இதில் 60 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா பிரதமர் மோடி மூன்று நாள் சுற்றுப்பயணம் இங்கிலாந்து செல்கிறார்
