இந்தி நடிகருடன் எமிஜாக்சன் காதல்

Online-Tamil-News-Malaysia

Online-Tamil-News-Malaysia

நவம்பர் 7, மதராச பட்டினம்’ படத்தின் முலம் தமிழ் திலை உலகில் அறிமுகமானவர் எமிஜாக்சன். அதன் பிறகு இந்தி பட உலகிலும் கால் பதித்தார். தற்போது தமிழில் விஜய் நடிக்கும் புதிய படம், தனுஷின் தங்க  மகன் படங்களில் நடித்து வருகிறார். ரஜினியின் ‘எந்திரன்–2’ படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மும்பையில் தங்கி இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அக்ஷய்குமாருடன் ஜோடி சேர்ந்து ‘சிங் இஸ் பிலிங்’ என்ற படத்தில் எமிஜாக்சன் நடித்து இருக்கிறார். தற்போது இந்தி அறிமுக நடிகர் சூரஜ்பாஞ்சோலியுடன் நடித்து வருகிறார். இந்த நிலையில் எமிஜாக்சனுக்கு சூரஜ்பாஞ்சோலி மிகவும் பிடித்து விட்டதால் அவருடன் மிகவும் நெருங்கிப் பழகுகிறார். சமீபத்தில் தான் அக்ஷய் குமாருடன் நடித்த படத்தை பார்ப்பதற்காக சூரஜ் பஞ்சோலியை தனிப்பட்ட முறையில் அழைத்துள்ளார்.  சமீபத்தில் சூரஜ் வீட்டின் அருகிலேயே எமிஜாக்சன் வீடு பார்த்து குடியிருக்கிறார். இரண்டு பேரும் அடிக்கடி ஜோடியாக சுற்றுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் எமிஜாக்சன் சூரஜ் பஞ்சோலியை தீவிரமாக  காதலிப்பதாக மும்பை பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.