நவம்பர் 4, உலக சிறைக் கைதிகளில் 25% பேர் அமெரிக்கர்களாக உள்ளனர் என்று அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். உலக மக்கள் தொகையில் அமெரிக்கர்களின் எண்ணிக்கை 5% மட்டுமே. ஆனால் உலக சிறைக் கைதிகளில் அமெரிக்க கைதிகளின் எண்ணிக்கை 25% உள்ளது. சுமார் 22 லட்சம் அமெரிக்கர்கள் சிறையில் உள்ளனர். சுமார் 7 கோடி பேர் குற்றப் பின்னணி கொண்ட வர்களாக உள்ளனர். அதாவது 5 அமெரிக்கர்களில் ஒருவர் குற்றப் பின்னணி உடையவர். இந்த புள்ளிவிவரம் கவலையளிக்கிறது.
மனிதர்கள் அனைவரும் வாழ்க் கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் தவறு செய்திருப்பார்கள். எனவே சிறையில் இருந்து திருந்தி வெளியே வருபவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அதிபர் ஒபாமா வருத்தம் உலக சிறை கைதிகளில் 25% பேர் அமெரிக்கர்கள்
