அக்டோபர் 30, தமிழ்ப்பள்ளிகளிகளின் மேம்பாடு மற்றும் கட்டுமானத் திட்டங்களின் மீது அரசாங்கம் அதீக கவணம் கொண்டுள்ளது. மாணவர்கள் சிறப்பான சூழ்நிலையில் பாடங்களைப் பயில வேண்டும். என்பதனைக் கருத்தில் கொண்டு தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்க்காக கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் சிறப்பு ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் அரசாங்கம் மொத்தம் ரிம 640 மில்லியன் தொகையை ஒதுக்கியுள்ளது. அரசாங்க உதவிப் பெறும் பள்ளிகளின் மீது கவனம் செலுத்தப்படும் வேளையில், அரசாங்கத் தமிழ்ப்பள்ளிகளின் அடிப்படை வசதிகள் குறித்து கண்டறிவதற்க்காக பிரதமர் டத்தோ நஜிப் துன் ரசாக் டிங்கில் தமிழ்ப்பள்ளிக்கு திடீர் வருகை மேற்க்கொண்டார். அரசாங்கத் தமிழ்ப்பள்ளிகளின் அடிப்படை வசதிகள் மோசமான நிலையில் உள்ளதாக பலர் கூறி வரும் வேளையில் அதனை நேரில் சென்று கண்டறிவதற்க்காக பிரதமர் இன்று இப்பள்ளியின் உண்மையான சூழ்நிலையைக் காண முடிந்தது.
கல்வியமைச்சின் தலைமைச் செயலாளர் டான் மடினா முகமட்டும் இப்பள்ளி எதிர்நோக்கும் பிரச்சனைகளை நேரடியாகக் கண்டறிந்தார். இப்பள்ளியில் தீர்வுக் காணப்படக்கூடிய சீரமைப்புப் பணிகழுக்கான நடவடிக்கை மிக விரைவில் எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டுள்ளார் மின்சார பழுது, அறிவியல் கூடம், தளவாடப் பொருட்கள் சீரமைப்பு மட்டுமின்றி மூடப்படாமலிருக்கும் கால்வாயிலிருந்து வெளிவரும் துற்நாற்றம் போன்ற சூழ்நிலையில் மாணவர்கள் வசதியாக கல்வி பயில இயலாது என கருத்துரைத்த பிரதமர் ,ஒரு பிரிவு இப்பள்ளிக்கு வருகை மேற்க்கொள்ளும் எனத் தெரிவித்தார்.
தற்போது பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் பள்ளிக் கட்டிடங்களின் நிலவரங்களைத் துல்லியமாக ஆராய்ந்த போது இப்பள்ளிக்கான இனைக் கட்டிடம் நிர்மாணிப்பு தொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் ஏறக்குறைய 6 ஏக்கர் நிலப்பரப்பளவில் இப்பள்ளியில் அமைத்துள்ளதால் புதிய கட்டிடம் நிறுவ இடப் பிரச்சனை எழ வாய்ப்பில்லை என்றும் தக்க நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார். தமிழ்ப்பள்ளிகளின் நிலை குறித்து கல்வியமைச்சு அதீத அக்கறை செலுத்துதல் அவசியம் எனக் கூறிய பிரதமர், தமிழ்ப்பள்ளி்களின் நிலை மற்றும் அங்கு மாணவர்கள் பாதுகாப்பான முறையில் கல்வி பயில முடியுமா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தணிக்கை அறிக்கை ஒன்றினை கல்வியமைச்சும் மலேசியத் தமிழ்ப்பள்ளிக்களுக்குக்கான மேம்பாட்டுத் திட்ட வரைவுப் பிரிவும் உடனடியாக மேற்கொண்டு தம்மிடம் சமர்பிக்க வேண்டும். எனக் கேட்டுக் கொண்டார். இவ்வருகையின் போது தமக்கும் கல்வியமைச்சுக்கும் ஒத்துழைப்பு நல்கிய பள்ளித் தலைமையாசிரியர் திரு.தமிழ்சேகரன் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்து இவர்களின் அர்ப்பணிப்பைக் காணுகையில் எதிர்வரும் காலத்தில் இப்பள்ளியின் செயல்திறன் தொடர்ந்து சிறப்பாக அமையும் என தாம் நம்புவதாகத் தெரிவித்தார் இறுதியாக அனைவருக்கும் பிரதமர் தனது தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.
Next Post: தமிழ்ப்பள்ளிக்கு கரம் கொடுப்போம்