என் தமிழ்

Online-Tamil-News-Malaysia

இறுதிக்கட்ட பணிகளில் வேதாளம் திரைபடம் அஜித் பார்வை

Online-Tamil-News-Malaysia

அக்டோபர் 27, அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘வேதாளம்’ சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், அஸ்வின் கக்குமனு, சூரி, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கு ‘வேதாளம்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இறுதிக்கட்ட பணிகளை இரவு-பகல் பாராமல் பார்த்து வருகின்றனர் படக்குழுவினர்.இந்நிலையில், இறுதிக்கட்ட பணிகளை மேற்கொள்ளும் குழுவினரை அஜித் நேரில் வந்து சந்தித்து, பணிகள் எந்த நிலையில் உள்ளது என கேட்டறிந்துள்ளார். இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, அஜித் திடீரென வந்து படக்குழுவை சந்தித்தார். அவர் எங்களுடன் ஒருநாள் முழுவதும் இருந்தது புதுதெம்பு ஆக இருக்கிறது என்கின்றனர் பட குழுவினர்.

Scroll to Top