விஜய்யுடன் விளையாட அவரது ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது

Online-Tamil-News-Malaysia

Online-Tamil-News-Malaysia

அக்டோபர் 26, நடிகர்களை மையப்படுத்தி வீடியோ, மொபைல் கேம்கள் வருவது புதிதல்ல. ரஜினி,  விஜய், சூர்யா பெயர்களில் வீடியோ கேம்கள் வந்துள்ளன.

கத்தி வெளியானபோது விஜய்யை மையப்படுத்தி புதிய மொபைல் கேம் வெளியானது.  இப்போது, எபிக் க்ளாஷ் என்ற பெயரில் புத்தம் புதிய கேம் ஒன்றை ஸ்கைடௌ  ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த 3டி மொபைல் கேமை பதிவிறக்கம் செய்து யாரும் விளையாடலாம். தொடர்ந்து 30 தினங்கள் விளையாடி அதில் கிடைக்கும் ஸ்கோரை நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தால், அதிக ஸ்கோர் எடுத்தவர்களுக்கு ஐபோன்கள் பரிசளிப்பதாக
அறிவித்துள்ளனர்.