என் தமிழ்

Online Tamil News

விஷாலுடன் நட்பு தொடரும் சரத்குமார் மகள் பேட்டி

Online Tamil News

அக்டோபர் 20, நடிகர் சங்கத் தேர்தலில் அப்பாவுக்கே என் வாக்கு என்று நடிகை வரலெட்சுமி தெரிவித்தார். ஆனால் விஷாலுடன் நட்பு தொடரும் என்று தெரிவித்தார் நடிகை வரலெட்சுமி. சரத்குமாரின் மகளான வரலெட்சுமி, நடிகர் விஷாலின் நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ளவர். இதனால் அவரது வாக்கு யாருக்கு என்பதில் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த நிலையில் வாக்களித்து விட்டு வந்த வரலெட்சுமி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில். யார் வெற்றி பெற்றாலும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை என்று தெரிவித்தார்.

Scroll to Top