என் தமிழ்

Online Tamil News Malaysia

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்தநாள்

Online Tamil News Malaysia

அக்டோபர் 15, இந்தியா முன்னாள் ஜனாதிபதி பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று. இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று அழைக்கபடும் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக கடைபிடிக்கப்பட தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். மாவட்ட தலைநகரத்திலும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவ-மாணவிகள் ஆகியோர் பங்கேற்கும் இளைஞர் பேரணி காலை 9 மணிக்கு நடத்தப்படுகிறது. அப்துல் கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் இன்று, அவர் படித்த பள்ளியிலிருந்து அவர் வசித்த இல்லம் வரை மாணவ-மாணவிகள் பங்கேற்கும் பேரணி நடத்தப்படும்.

Scroll to Top