இந்த ஆண்டு ஹஜ் பயணம்

இந்த ஆண்டு ஹஜ் பயணம்

h

செப்டம்பர் 30, இந்த ஆண்டு ஹஜ் பயணம் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் மேற்கொண்டனர். கடந்த 25 ஆண்டுகளில் மெக்காவில் நடைபெற்ற மிக மோசமான விபத்து இது.

மினா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்காக 1090 புகைப்படங்களை சவுதி அரசு இந்தியா மற்றும் பாகிஸ்தான் தூதரகத்துக்கு அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகின. இவை அனைத்தும் மினா நகரில் சாத்தான் மீது கல்லெறியும் போது, கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் என்று செய்தி பலராலும் புரிந்துகொள்ளப்பட்டது.

இந்நிலையில், இந்த எண்ணிக்கை தொடர்பாக சவுதி அரசின் உள்துறை அமைச்சகம் செய்தி தொடர்பாளர் மன்சூர் அல் துர்க்கி தற்போது தெளிவான விளக்கம் அளித்துள்ளார். செப்டம்பர் 11-ம் தேதி கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 111 யாத்ரீகர்கள் உயிரிழந்ததாகவும், சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சியில் பங்கேற்க மெக்கா நகரில் இருந்து ஒரே நேரத்தில் ஹஜ் ஜமாத்துக்கு புறப்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி சுமார் 769 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த 880 பேர் போக, மீதிபேர் வெளிநாடுகளில் இருந்து வேலைக்காக வந்து சவுதியில் தங்கியிருந்தவர்கள் மற்றும் சவுதி அரேபியாவை சேர்ந்த மக்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.