செப்டம்பர் 18, நான் இதுவரை யாரையும் நான் காதலிக்கவில்லை தனியாகத்தான் இருக்கிறேன் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். காஜல் அகர்வால் திருமணத்தையும் உடனடியாக முடிக்க பெற்றோர்கள் வரன் பார்ப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், காஜல் அகர்வால் ஒரு இளைஞருடன் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இணையதளங்களில் வெளிவந்தன. அவர் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் என்றும் இருவரும் காதலிக்கிறார்கள் என்றும் கூறப்பட்டது. இதற்கு காஜல் என் முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது திருமணத்துக்கு நான் அவசரப்படவில்லை என்று கூறினார்.