செப்டம்பர் 18, இன்று அதிகாலை சுமார் 10 தீவிரவாதிகள் பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஆறு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் ராணுவ மேஜர் ஜெனரல் தெரிவித்துள்ளார். விமானப்படை தளத்தை கைப்பற்றும் நோக்கத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக ராணுவ மேஜர் ஜெனரல் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடந்து வருகின்றது என்றும் மேஜர் ஜெனரல் அசிம் பாஜ்வா தெரிவித்துள்ளார்.