செப்டம்பர் 9, சவுதி கூட்டுப்படைகள் நடத்திய குண்டு வீச்சில் 20 இந்தியர்கள் பலியானார்கள். ஏமன் நாட்டில், ஈரான் ஆதரவு பெற்ற கவுதிஸ் கிளர்ச்சியாளர்கள், அதிபர் அப்த் ரப்பு மன்சூர் ஹதிக்கு எதிராக கடந்த ஆண்டு முதல் போரில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரானின் தலையீட்டில் இருந்து ஏமன் நாட்டை மீட்பதற்காக, சவுதி அரேபியா தலைமையிலான வளைகுடா நாடுகள் அடங்கிய கூட்டுப்படை களம் இறங்கியது. அப்படை, கவுதிஸ் கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டு, பல நகரங்களை ஒவ்வொன்றாக மீட்டு வருகிறது. ஹூடெய்டா துறைமுகத்தில் எரிபொருள் கடத்தல்காரர்கள் மீது சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 20 இந்தியர்கள் பலியானதாகவும் கூறப்படுகிறது.
Previous Post: யூ.பி.எஸ்.ஆர் தேர்வு இன்று துவங்கியது
Next Post: தமிழ்நாட்டில் மீண்டும் மின் தட்டுப்பாடு