டிசம்பர் 12, தைவானின் வடகிழக்கு பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.
கட்டிடங்கள் குலுங்கியதால் பீதி அடைந்த பொதுமக்கள், வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கம் காரணமாக பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை.
தைபேயின் வடகிழக்கு பகுதியில் இருந்து 106 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்தது. கடலுக்கு அடியில் 254 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.