ஈப்போ, 31/01/2025 : அடுத்த வாரம் தொடங்கி மலேசியாவிற்கு உலக தலைவர்கள் பலர் வருகை புரியவிருக்கின்றனர்.
அவர்களின் வருகை அனைத்து நாடுகளுடன் உடனான நல்லுறை வலுப்படுத்தும்.
உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் மற்றும் துருக்கி அதிபர் ரீஷேப் தயிப் எர்டோ-ஒன் ஆகியோரின் வருகையும் அதில் அடங்கும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
”நமக்கு இப்போது நண்பர்கள் தேவைப்படுவதால், அவர்களைச் சார்ந்து இருக்க முடியாது. முன்பு பக்கபலமாக இருந்தோம். இப்போது நாம் தொடர்ந்து அமெரிக்காவிடம் முதலீடு கேட்கிறோம். ஐரோப்பிய ஒன்றியத்துடனான நமது உறவை மேம்படுத்துகிறோம், நாம் பிரிக்ஸ் உடன் சிறப்பாக செயல்படுகிறோம். சீனாவுடன் நெருக்கமாக இருக்கிறோம்,” என்றார் அவர்.
இன்று, பேராக் ஈப்போவில் நடைபெற்ற பேராக் சீன வர்த்தக மற்றும் தொழில் சபை PCCCI-இன் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, அன்வார் அவ்வாறு தெரிவித்தார்.
நாட்டு மக்கள் மற்றும் பொருளாதாரத்திற்கு சீனாவுடனான நல்லுறவு முக்கியம் என்றும் பிரதமர் கூறினார்.
மலேசியாவில் சீனாவின் பெரிய முதலீடு தொடர்பாக சில தரப்பினரிடமிருந்து சர்ச்சைகள் எழுந்தாலும், அதனை ஒரு காலனித்துவ மனப்பான்மையாக கருதுவதாக அவர் தெரிவித்தார்.
”நமது கிராமங்களில் எல்லாம் சீனாவிடம் ஒப்படைக்க ஆட்களை தயார்படுத்துகிறார்கள். இவை தவறான எண்ணங்கள். எங்களைப் பொறுத்தவரை சீனா உட்பட யார் முதலீடு செய்தாலும், நாம் ஊக்குவிப்போம். அவர்களிடன் சிறப்பாக செயல்படுவோம். இது நமது கொள்கை,” என்று அன்வார் கூறினார்.
சீனாவின் செயற்கை நுண்ணறிவு AI மாதிரியான DEEPSEEK குறித்து அதிருப்திகள் இருந்தாலும், அதன் வளர்ச்சியை சரியான முறையின் பயன்படுத்த வேண்டும் என்று அன்வார் தெரிவித்தார்.
Source : Bernama
#PMAnwar
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia