ஆகஸ்டு 6, கடந்த ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி காணாமல் போன MH370 விமானம் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370 மாயமானது. மாயமான மலேசிய விமானம் விபத்தில் சிக்கியது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் உள்ள லா ரீயூனியன் தீவில் விமான பாகம் ஒன்று கரை ஒதுங்கியது. கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் பாகங்கள் மலேசிய விமானத்தினுடையது என அந்நாட்டு பிரதமரும் உறுதிபடுத்தியுள்ளார். மலேசிய பிரதமர் நஜீப் துன் ரசாக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 239 பேருடன் சென்ற விமானத்திற்கு என்ன ஆனது என்று தெரியாமல் உலகமே குழம்பிப் போய் இருந்தது. 26 நாடுகளை சேர்ந்த சர்வதேச நிபுணர் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Previous Post: திருப்பதியில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள்
Next Post: நாகா படத்தில் ஜோதிகா நடிக்க வாய்ப்பு