ஜூலை 22, கிள்ளான் பகுதியில் இந்தியர்களுக்கென்று தனிப்பட்ட முறையில் வியாபாரம் செய்துகொள்ள ஒதுக்கப்பட்ட இடம்தான் தெங்கு கிளானா, லிட்டில் இந்தியா கிள்ளான். ஆனால் இப்போது இந்தியர்களுக்கென்று வியாபாரம் செய்யும் உரிமைகளும் இழக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் தெங்கு கிளானாவில் காயத்ரி பட்டு மாளிகை கடை பக்கத்தில் 10 வருடங்களாக கடைகளை போட்டு சிறு தொழில் வியாபாரம் செய்து வந்த நமது இந்தியர்களை மாநகர மன்ற அதிகாரிகள் கடந்த இரண்டு வாரங்களாக இங்கு கடைகளை போடக்கூடாது உடனடியாக அகற்ற வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர். இதனால் அங்கு கடைகளைப் போட்டு வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளனர் என தெங்கு கிளானா வட்டார சிறு தொழில் சங்கத் தலைவர் தர்மராஜ் தெரிவித்தார்.
Previous Post: ஐ.எஸ். தீவிரவாதிகளால் தமிழகத்துக்கு ஆபத்து
Next Post: கின்னஸ் சாதனை படைத்த பாகுபலி