ஜூலை 14, மாயமான டோர்னியர் விமானத்தில் கருப்பு பெட்டி உட்பட பல பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒரு விமானியின் கைக்கடிகாரம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் மனித எலும்புக்கூடுகள் கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொருட்களின் புகைப்படங்களை அதிகாரி ஐ.ஜி. சர்மா செய்தியாளர்களிடம் காண்பித்தார். 35 நாட்களாக நடைபெற்று வந்த டோர்னியர் விமானத்தை தேடும் பணி நிறைவடைந்ததாகவும் தெரிவித்தார்.