ஜூலை 2, மலேசிய சுகாதார பராமரிப்பு நிறுவனங்கள் தங்கள் சேவையை மேம்படுத்திக்கொள்வதில் மிகப் பெரிய சவாலை எதிர்நோக்கி வருகிறது என்று மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் அஷோக் பிலிப்ஸ் தெரிவித்தார். சுகாதார பராமரிப்பு சுற்றுலா துறையில் சிறந்து விளங்க வேண்டுமென்றால் நோயாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நிறுவனங்களின் தரத்தை உயர்த்த வேண்டும்.
நாம் நாட்டில் கடந்த ஆண்டு 770,000 சுகாதார சுற்றுப்பயணிகள் வருகைத்தந்துள்ளனர். இவர்களால், நாட்டுக்கு 700 மில்லியன் ரிங்கிட் வருமானம் கிடைத்தது என பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூறியிருந்தார்.