ஜூன் 20, சிலி நாட்டைச் சேர்ந்த 92 வயது பாட்டி ஒருவரின் வயிற்றில் கடந்த 50 வருடங்களாக குழந்தையின் கரு ஒன்று பதப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பது மருத்துவ உலகை வியக்க வைத்துள்ளது. அவரது இடுப்பு பகுதியில் எக்ஸ்-ரே செய்து பார்த்த போது அங்கு சந்தேகத்திற்கிடமான ஏதோ ஒன்று இருப்பது போல் தோன்றவே, பல பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர். அப்போதுதான் அவரது கருப்பைக்கு வெளியே கடந்த 50 வருடங்களாக பதப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு குழந்தையின் கரு இருப்பது தெரிய வந்தது. அது 7 மாதம் வளர்ந்த நிலையில் 2 கிலோ எடையுடன் இருந்தது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியது.