ஜுன் 15, கெத்துவா கம்போங் அல்லது இந்தியர் கிராமத்து தலைவர்கள் எனப்படுபவர்கள் ஊராட்சி மன்ற ஆட்சியில் ஒவ்வொரு குடியிருப்பு பகுதியிலும் வாழும் இந்தியர்களை பிரதிநிதித்து மாநில அரசாங்க சம்பளத்தை ஒரு ஊக்குவிப்பு தொகையாக பெரும் மாநில அரசின் ஆவர்.
இவர்களின் வேலை அவரவர் பிரதிநிதிக்கும் குடியிருப்பு பகுதியிலிருக்கும் இந்தியர் குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அடையாளங் கண்டு தீர்த்து வைப்பதிலும், மாநில அரசின் திட்டங்களை தங்கள் பகுதிகளில் பரப்புவதே ஆகும் மாநிலங்களிலும் இந்த கெத்துவகம்போங் திட்டங்கள் எத்தனையோ வருடங்களாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
சிலாங்கூர் மாநிலத்தில் இதே மாதிரி இருந்த இந்தியர் கிராமத்து தலைவர்களுக்கான பதவிகள் கடந்த 31 அக்தோபர் 2014 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான ஊதியமும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தப்பட்டுவிட்டது. இப்பொழுது எனது கேள்வி என்னவென்றால் ஏன் இந்தியர் பிரதிநிதிகளுக்கு மட்டும் இந்த நிலை. ஏன் மற்ற இனப் பிரதிநிதிகளுக்கு இந்த நிலை ஏற்படவில்லை?? இந்த முடிவுக்கு எந்த ஒரு காரணத்தை கூறினாலும் மாற்று இந்தியத் தலைவர்களை நியமிக்க 8 மாதங்களாக சிலாங்கூர் அரசாங்கம் திணறுகிறதா? இந்த தருணத்தில் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனையை யார் கவனிப்பார்கள்? இந்தியர்களின் சமூகநலத் தேவையை சிலாங்கூர் அரசாங்கம் மதிப்பளித்து முக்கியத்துவம் கொடுத்து பார்க்கும் அரசு என்றால் இன்னேரத்திற்கு பிரதிநிதிகளை நியமித்திருக்க வேண்டுமா இல்லையா?? தேர்தல் சமயத்தில் மட்டும் இந்தியர்கள் மனம் குளிரும்படி எம்ஜிஆர் பாடல் பாடினால் மட்டும் பத்தாது. எப்பொழுதும் அலட்சியம் காட்டமால் அவர்களின் தேவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை சிலாங்கூர் அரசாங்கம் கற்றுக்கொள்ளவேண்டும். கோயில்களை இடித்து இந்துக்களின் மனதை புண்படுத்தியது போதும். தொடர்ந்து இந்தியர்களை சிலாங்கூர் மாநில அரசு ஒருத் தலை பட்சமாக பார்ப்பதை வேண்டும்.
ஆக நம்பி வாக்களித்த சிலாங்கூர் மாநில வாழ் இந்தியர்களை ஏமாற்றாமல், புறக்கணிக்காமல் உடனடியாக அனைத்து இந்தியர் கிராமத்து தலைவர்களையும் நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.