மே 7, இரண்டாம் உலகப்போரில் வீரர்கள் கூட்டமாக மடிந்தது போல், தீவிரவாதத்திற்கு உலகம் முழுவதும் மக்கள் பலியாகி வருகின்றனர். உலகையே அச்சுறுத்தும் சக்தியாக தீவிரவாதம் வளர்ந்து வருகிறது என்று ஐ.நாவுக்கான இந்தியத் தூதர் பகவந்த் பிஷ்நோய் தெரிவித்தார். இரண்டாம் உலகப்போர் நடந்து முடிந்த நினைவு நாள் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் ஐ.நாவுக்கான இந்தியத்தூதர் பகவந்த் பிஷ்நோய் பேசினார்.
இரண்டாம் உலகப்போர் போல தீவிரவாதம் உலகையே அச்சுறுத்துகிறது
