டெஸ்ட் கேப்டனுக்கு டோனியே பொருத்தமானவர்: இயன் சேப்பல் கருத்துக்கு டிராவிட் பதில்

டெஸ்ட் கேப்டனுக்கு டோனியே பொருத்தமானவர்: இயன் சேப்பல் கருத்துக்கு டிராவிட் பதில்

Rahul

இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து டோனி விலக வேண்டும். வீராட் கோலிக்கு கேப்டன் பதவியை வழங்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணையாளருமான இயன் சேப்பல் கூறி இருந்தார்.

இதற்கு இந்திய அணியின் முன்னாள் கேட்பனும், அணியின் தற்போதைய பேட்டிங் ஆலோசகருமான ராகுல் டிராவிட் சரியான பதிலடி கொடுத்துள்ளார். டோனியே கேப்டனுக்கு பொருத்தமானவர். வீராட் கோலிக்கு சரியான நேரம் வரவில்லை என்று கூறியுள்ளார்.

லண்டனில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:–

2011–12–ம் ஆண்டு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இந்திய அணி மோசமாக விளையாடி அனைத்து டெஸ்டிலும் தோற்றதற்கு எல்லோரும் டோனியை குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் தற்போதைய இளம் அணியை அவர் சிறப்பாக வழி நடத்தி செல்கிறார். டோனிதான் சரியான தேர்வு. டெஸ்ட் அணிக்கு பொருத்தமானவர். வீராட் கோலிக்கு அதற்கான நேரம் இன்னும் வரவில்லை. அதற்கான நேரம் வரும் போது அவர் கேப்டன் ஆவார்.

5 பவுலர்களுடன் இந்திய அணி விளையாடுவது துணிச்சலான முடிவாகும். இது சரியானதாகவே நான் கருதுகிறேன். கடந்த காலங்களில் வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி 5 பவுலருடன் ஆட பயப்படுவார்கள். ஆனால் டோனியும், பயிற்சியாளர் பிளட்சரும் துணிந்து இந்த புத்திசாலித் தனமான முடிவை எடுத்துள்ளார்.

இவ்வாறு ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.