நேபாள் மக்களின் துயரத்திற்கு ம.இ.கா இளைஞர் பிரிவு அழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது

நேபாள் மக்களின் துயரத்திற்கு ம.இ.கா இளைஞர் பிரிவு அழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது

Earthquake

ஏப்ரல் 30, சனிக்கிழமை நேபாளத்தைத் தாக்கிய நிலநடுக்கம் இதுவரை 8 மில்லியன் அந்நாட்டு மக்களை பாதித்துள்ளதாகவும் அதில் 5000 அதிகமான மக்கள் இதுவரை இறந்துள்ளதாகவும் ஜக்கிய நாட்டு சபையின் அறிக்கை கூறுகிறது இருப்பினும் இந்த எண்ணிக்கை 10,000தை எட்டக் கூடும் என அந்நாட்டு பிரதமர் சுசில் கொய்ராலா கூறுகின்றார்.

இது மிகவும் வேதனைக்குள்ளான செய்தி அந்நாட்டு மக்கள் நீரின்றி உணவின்றி, மின்சக்கி வசதியின்றி ஒரு துயரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். போதாக்குறைக்கு ஏதாவது நோய்கள் பரவும் அச்சத்திலும் அந்நாட்டு மக்கள் வாழ்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து இயற்கை பேரிடர் நிவாரண நிதியையும் மருத்துவ உதவிகளையும் எதிர்பார்த்து அந்நாட்டு மக்கள் இருக்கின்றனர்.

இம்மாதிரியான மிகவும் துயரமான நிலையில் வாழும் அந்நாட்டு மக்களின் நிலை உலகில் யாருக்கும் இனி வராதிருக்க் ம.இ.கா இளைஞர் பிரிவு இந்நிலையில் இறைவனை வேண்டிக்கொள்கிறது. இந்த இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் சிவராஜ் சந்திரன் கீழ் இயங்கும் ம.இ.கா இளைஞர் பிரிவு நிச்சயமாக எங்களால் இயன்ற பொருட்களை சேகரித்து, முக்கியமாக மருத்துவ பொருட்களை நேபாள மக்களுக்கு கூடிய விரைவில் அனுப்பி வைப்போம் என்று உறுதி கூறுகின்றேன்.