டத்தோ ஸ்ரீ உத்தாமா சாமிவேலுவை வாதத்திற்கு அழைக்க சிவசுப்ரமணியம் யார்

டத்தோ ஸ்ரீ உத்தாமா சாமிவேலுவை வாதத்திற்கு அழைக்க சிவசுப்ரமணியம் யார்

logo

ஏப்ரல் 20, ம.இ.காவை குட்டி சுவராக்கியது யார் எனும் தலைப்பில் விவாதிக்க தயாரா என்று முன்னாள் ம.இ.கா தேசியத் தலைவருக்கு சவால் விடுத்திருக்கும் ம.இ.கா தகவல் பிரிவுத்தலைவர் சிவசுப்ரமணியத்தின் செயல் சிறுப்பிள்ளைத் தனமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது.

இப்படி வெற்று அறிக்கைகளும் வீண் சவால்களும் விடுவதை தவிர நமது கட்சிக்கும் சமுதாயத்திற்கும் சிவசுப்ரமணியம் ஆற்றிய பங்கு என்ன? அதுவும் 31 ஆண்டு கட்சியை நிர்வகித்த ஒருவரை நோக்கி சவால் விடும் இவரை நினைத்து சிரிக்காமல் வேறு என்ன செய்வது?

சமுதாயத்திற்கு டத்தோ ஸ்ரீ உத்தாமா சாமிவேலு அவர்கள் ஆற்றிய சேவைகள் யாவும் ஈடு இணையற்றவை. இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் சிவசுப்ரமணியத்திற்கு டத்தோ ஸ்ரீ உத்தாமாவை நோக்கி கேள்விக் கேட்க தகுதியே இல்லை எனலாம்.

கட்சியை சீர்குழைத்து விட்டார் பழனிவேல், என்று டத்தோ ஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு கூறிய கருத்து மிக சரியே. நேரடியாகவும் மறைமுகமாகவும், இன்று இந்த அவல நிலையில் கட்சி இருப்பதற்கு காரணம் டத்தோ ஸ்ரீ பழனிவேல்தான்.

நித்திரையில் இருக்கும் சிவசுப்ரமணியம் எழுந்து, சொல்லும் கருத்துகளுக்கு பொருள் இருக்கிறதா, என்று கொஞ்சமாவது மூளையை உபயோகிக்கும் காலம் எப்பொழுது விடியும் என்று தெரியவில்லை. கட்சியின் தலைவர் மேல் இருக்கும் விசுவாசத்தை பறைசாற்ற இப்படி அரைவேக்காடுதனமாக அறிக்கை விட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இப்படி தேவையில்லாத வேலையைச் செய்வதை விட்டுவிட்டு, சமுதாயத்தை முன்னேற்றும் வழிவகைகளை கண்டறிய சிவசுப்ரமணியத்தை வேண்டுகிறேன். சமுதாயத்திற்காக கடந்த ஒர் ஆண்டில் சகோதரர் சிவராஜ் சந்திரன் கீழ் இயங்கும் ம.இ.கா இளைஞர் பிரிவு, டத்தோ ஸ்ரீ பழனிவேல் தேசிய தலைவர் பொறுப்பு ஏற்றதிலிருந்து அதாவது 2010லிருந்து அதிகமாக நாங்கள் அதிகமாக சேவையாற்றியுள்ளோம். இதை நிருபிக்க எங்களிடம் சகல சாட்சிகளும் இருக்கிறது. அதே வேளையில் கட்சியைப் பற்றியும் நடந்துக்கொண்டிருக்கும் உட்கட்சிப்புசலையும் குறித்து தவறான பரப்புரையை பரப்பி வரும் நபர்கள் அதனை நிறுத்திக் கொள்வார்கள் என நம்புகிறேன்.