மார்ச் 31, நமது இந்திய இளைஞர்கள் படிக்கிறார்கள், பட்டம் பெறுகிறார்கள், வேலையும் செய்கிறார்கள் ஆனால் அதில் பெரும் வருமானம் அவர்கலுக்கு போதவில்லை. அதுமட்டுமின்றி, எதாவது வணிகம் செய்ய எண்ணும் இளைஞர்களுக்கு என்ன செய்யலாம் என்று தெரியவில்லை. இப்பிரச்சனைகள் யாவும் களையவும் புதிய பரிணாமத்தில் வியாபாரத்தில் முக்கியமாக சேவை வழங்கும் துறையில் இந்திய இளைஞர்களை ஈடுப்படுத்தும் நோக்கத்திலும் உருவாக்கப்பட்டதுதான் INDIAN COMMUNITY UPLIFTMENT AND BUSINESS EMPOWERMENT(INCUBE).
இதில் முதல் திட்டமாக நாடெங்கிலும் உள்ள 500 இளைஞர்களுக்கு 4 பயிற்சிகள் RIVERBANK ACADEMYயின் மூலம் மூன்று வாரங்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. அவை முறையே, T-Shirt printing, கைத்தொலைப்பேசி சரிப்பார்த்தல், Electrical and plumbing, & குளிரூட்டி சரிப்பார்த்தல். இந்த திட்டம் கடந்த வாரம் சனிக்கிழமை 28 மார்ச் 2015 அன்று, சுங்கை சிப்புட் MH தங்கும் விடுதியில் மிக விமரிசையாக தொடங்கப்பட்டது. முதல் நிகழ்ச்சி என்பதால் மாணவர் பதிவும், போதிக்கவிருக்கும் பாடங்களின் ஒரு சிறு கண்காட்சியும் ஏற்பாடுச் செய்யப்பட்டது. சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட ம.இ.காவின் இளைஞர் பிரிவின் தலைவர் சகோதரர் சிவராஜ் சந்திரன் இந்த திட்டத்தின் அறிமுகத்தில் அரசியல் நோக்கங்கள் யாவும் இல்லை. முழுமையாக நமது இளைஞர்கள் இந்த மாதிரியான கைத்தொழிலை கற்றுக்கொண்டால் அவர்கள் அவர்களின் வருமானத்தை பெருக்க உதவியாக இருக்கும் எனும் ஒரே நோக்கம்தான் ம.இ.கா இளைஞர் பிரிவை இத்திட்டத்தை முற்றிலும் இலவசமாக வழங்க முன்வந்த காரனம் என்று கூறினார்.
RIVERBANK ACEDEMY உரிமையாளர் திரு.மகேந்திரன் பேசுகையில், இப்படி ஒரு திட்டத்தை எப்படி சிவராஜ் யோசித்தார் என்றே தெரியவில்லை. மிகவும் பயனுள்ள ஒரு திட்டமாக அமையக்கூடிய இந்த பயிற்சி வகுப்புகளில் சேர விருக்கும் மாணவர்கள் தயவு செய்து மூன்று வாரங்களும் தவறாமல் கற்றுக்கொண்டு இப்பயிற்சியை பயனைடய கேட்டுக்கொண்டார்.
இத்திட்டத்தில் வழங்கப்படும் பயிற்சிகள் யாவும் குறைந்த முதலிட்டை கொண்டு தொடங்கக்கூடிய ஒரு கைத்தொழில்களாகும். ஆக இதில் பங்குக்கொள்வதின் வழி எந்த வகையிலும் நமது இந்திய இளைஞர்களுக்கு நட்டம் இல்லை என்று உறுதியாக கூறினார் சிவராஜ். இந்த தொடக்கவிழாவை சகோதரர் நேருஜியின் கீழ் சுங்கை சிப்புட் ம.இ.கா இளைஞர் பிரிவுடன் இணைந்து பல அரசு சாரா இயக்கங்களும் ஒன்றிணைந்து ஈடுப்பட்டன. சுங்கை சிப்புட் ம.இ.கா கிளைத்தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்குக்கொண்டார்கள் என்பது குறிப்பிடதக்கது.