நைஜீரியாவின் தீவிரவாதிகள் 506 பேரை கடத்திச்சென்றனர்

நைஜீரியாவின் தீவிரவாதிகள் 506 பேரை கடத்திச்சென்றனர்

Kidnappers

மார்ச் 26, நைஜீரியாவின் வடக்கு பகுதியை கைப்பற்றிய போகோஹரம் தீவிரவாதிகள், அங்கு ஒரு குறிப்பிட்ட அரசை அமைப்பதற்காக தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பள்ளிக்கூட மாணவிகள் 200 பேரை தீவிரவாதிகள் கடத்திச்சென்றனர். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் நைஜீரிய ராணுவத்துடன் அண்டை நாடான சாத், நைஜர் நாடுகளின் வீரர்களும் ஈடுபட்டு உள்ளனர்.

இந்தநிலையில் டமாஸ்க் நகருக்குள் நேற்று முன்தினம் புகுந்த தீவிரவாதிகள் அங்கு இருந்தவர்களை நோக்கி திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 50 பேர் இறந்தனர். பின்னர் இளம்பெண்கள், குழந்தைகள் உள்பட 506 பேரை கடத்திச்சென்றனர்.

நைஜர் மற்றும் சாத் ராணுவத்தினர் கடந்த மாதம் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்டவர்களை தான் தற்போது மீண்டும் தீவிரவாதிகள் கடத்திச்சென்று உள்ளனர். கடத்தப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டு உள்ளது.