மார்ச் 25, இந்திய கடற்படைக்கு சொந்தமான டோர்னியர் ரோந்து விமானம் நேற்று கோவா கடற்பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டது. இவ்விமானத்தில் பைலட் உள்பட மூன்று அதிகாரிகள் பயணம் செய்தனர்.
விமானம் கோவாவின் கார்வார் கடற்பகுதியில் இருந்து 10 கி.மீ. கடல்மைல் தூரத்தில் நேற்றிரவு 8.10 மணியளவில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள், கடலில் தத்தளித்த அதிகாரி ஜோஷி என்பவரை உயிருடன் மீட்டனர். விமானத்தில் பயணம் செய்த விமானி மற்றும் பயிற்சியை பார்வையிட்ட மற்றொரு அதிகாரியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆறு போர்க்கப்பல்கள் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் விமானங்களும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.