750 லூப்தான்சா விமானங்கள் ரத்து

750 லூப்தான்சா விமானங்கள் ரத்து

air12

மார்ச் 20, ஜெர்மன் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான லூப்தான்சா விமான நிறுவனத்தின் விமானிகள் ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் தொழிற்சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் கடந்த மாதம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் விமான சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நீண்ட தூர விமானங்களை இயக்க மறுத்து இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை லூப்தான்சா விமான நிறுவனத்தின் விமானிகள் இன்று தொடங்கியுள்ளனர். முதல் நாள் போராட்டம் காரணமாக உள்நாட்டு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இயக்கப்பட வேண்டிய 750 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.