மார்ச் 17, கேரளாவில் பி.பி.ஏ இரண்டாமாண்டு படிக்கும் இனியா, தமிழில் ரிலீசாகாத ‘ரெண்டாவது படம்’, ரிலீசான ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். இனி அப்படி ஆட மாட்டேன் என்று, கற்பூரம் அடித்து சத்தியம் செய்துள்ளார்.
அதாவது, சின்னச் சின்ன ஹீரோக்களின் படங்களில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டு, மிச்சம் மீதி இருக்கும் நல்ல பெயரை கெடுத்துக் கொள்ள மாட்டாராம். மலையாளம் மற்றும் தமிழில் மட்டும் கவனம் செலுத்தும் அவர், ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தில் நடிகை வேடத்தில் நடித்து வருகிறார்.