மார்ச் 7, MH370 விமானம் காணாமல் போய் நாளையுடன் 1 வருடம் நிறைவடைவதைத் தொடர்ந்து கேப்டன் சஹாரி அஹ்மாட்டின் சகோதரி சக்கினா அறிக்கை வெளியிட்டுள்ளர். இதுவரை விமானம் காணாமல் போனதற்கான எந்தவொரு ஆதாரமும் நமக்கு இன்னும் கிடைக்கவில்லை. அப்படி இருக்கும் போது என் சகோதரரைக் குற்றம் சாட்டுவது தவறாகும் என்று சக்கினா ஷா தெரிவித்தார். எங்களுக்கு வரும் ஆறுதலான வார்த்தைகளுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் கூறினார்.
சில ஊடகங்கள் உண்மையை மறைத்து கூறுவது கண்டிக்கத்தக்கது என சக்கினா ஷா தெரிவித்தார். சில உள்நாட்டு ஊடகங்களுக்கு நாங்கள் வழக்கறிஞர் கடிதம் அனுப்பும் அளவுக்கு எங்கள் நிலைமை மோசமாகியது என சக்கினா ஷா தெரிவித்தார்.