மார்ச் 2, பூமியிலிருந்து 418 கி.மீ. உயரத்தில், 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 6 லட்சத்து 10 ஆயிரம் கோடி) மதிப்பில், மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு, அதில் விண்வெளி ஆராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் விண்வெளி நிலையத்துக்கு வணிக ரீதியில் வரவுள்ள விண்கலங்களை நிறுத்தி வைக்கவும், தகவல் பரிமாறிக்கொள்ளவும் தேவையான கட்டமைப்பு வசதிகளை கவனிப்பதற்காகவும் அமெரிக்க விண்வெளி வீரர்கள் பேரி பட்ச் வில்மோர், டெர்ரி வர்ட்ஸ் ஆகிய இருவரும், விண்வெளி நிலையத்தில் இருந்து இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு வெளியே வந்தனர்.