என் தமிழ்

ஜெயலலிதா வழக்கில் க.அன்பழகனின் மனு தள்ளுபடி

jaya

பிப்ரவரி 6, சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். ஐகோர்ட்டு தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் தங்களை 3-வது நபராக சேர்க்க வேண்டும் என்று கோரி தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் மற்றும் பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி ஆகியோர் தனித்தனியாக மனு தாக்கல் செய்து இருந்தனர். அந்த மனுக்கள் மீது நேற்று முன்தினம் விசாரணை நடந்து முடிந்தது.

நீதிபதி குமாரசாமி தீர்ப்பை படித்தார். க.அன்பழகன் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார்.

Scroll to Top