பிப்ரவரி 6, அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்னை அறிந்தால்’ படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அருண் விஜய்யும் நடித்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு இணையாக அருண் விஜய்யின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அஜித்துடன் தான் இணைந்து நடித்த படத்திற்கு ரசிகர்கள் இவ்வளவு வரவேற்பு கொடுத்துள்ளதை கண்டு, ஒருகட்டத்தில் அருண் விஜய் கண்கலங்கிவிட்டார். ரசிகர்களிடமிருந்து பிரிய மனமில்லாமல் கண்கலங்கியவாறே அங்கிருந்து வெளியேறினார்.






