பிப்ரவரி 6, தைவான் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31ஆக உயர்ந்தது. தைவான் நாட்டின் டிரான்ஸ் ஆசிய நிறுவனத்தின் பயணிகள் விமானம் 58 பேருடன் தைபே நகரின் சாங்சன் விமான நிலையத்திலிருந்து, கின்மென் தீவுக்கு நேற்று முன்தினம் காலை புறப்பட்டது. சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தைபே நகரில் தாழ்வாக பறந்தது. ரோட்டில் இருந்த பாலத்தின் மீது விமானத்தின் இடது புற இறக்கை மோதியது. பின் அந்த விமானம் அருகில் உள்ள கீலங் என்ற ஆற்றுக்குள் விழுந்தது. அதில் பயணம் செய்த 58 பேரில் 15 பேர் நேற்று முன்தினம் மட்கப்பட்டனர்.
இதனிடையில் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது என அரசு அறிவித்துள்ளது. மேலும் 12 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. பைலட் சூப்பர்: விமான விபத்து குறித்து தைபே நகர மேயர் கோ வென்ஜி கூறுகையில், விபரீதத்தை குறை க்க பைலட் முடிந்த அளவு முயற்சித்துள்ளார். உயரமான கட்டிடங்கள் மீது விமானத்தை மோத விடாமல் சமாளித்து அதை குறுகிய ஆற்றில் இறக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், அவரது முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது என பைலட்டை புகழ்ந்துள்ளார்.