பிப்ரவரி 4, ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பிணைக்கைதியாக இருந்த ஜோர்டான் விமானி உயிருடன் எரிக்கப்பட்டது தொடர்பான வீடியோவை தீவிரவாதிகளின் ஊடக மையமான அல்-பர்கான் வெளியிட்டுள்ளது. தீவிரவாதிகளின் இந்த வெறிச்செயல் உலகம் முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க கூட்டுப்படை தலைமையில் நடைபெற்ற வான்வழி தாக்குலில் பங்கேற்ற ஜோர்டான் விமானியான முயாத் அல்–கசாஸ்பெ, எப்-16 என்ற ஜெட் விமானத்தை ஓட்டி சென்று தீவிரவாதிகளின் சிரிய தலைமையகம் உள்ள ரக்காவில் தாக்குதல் நடத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த விமானம் விபத்துக்குள்ளாக, விபத்திலிருந்து தப்பித்த அவர் தீவிரவாதிகளிடன் பிடிபட்டார்.
இந்நிலையில் விமானி அல்-காசாஸ்பேவை கூண்டில் அடைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொன்றுள்ள வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
ஆரஞ்சு நிற உடை அணிந்த அவர் தனக்கு என்ன நேரப்போகிறது என்று தெரியாமலேலே அந்த கூண்டை நோக்கி நடந்துவருகிறார். பின்னர் உடைகளில் பெட்ரோல் ஊற்றப்பட்ட நிலையில் கூண்டுக்குள் நிற்கும் அவர் தீ வைத்து எரிக்கப்படுகிறார். இவ்வாறு அவர் எரித்துக்கொல்லப்படும் புகைப்படங்களை பார்த்து, உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.