ஜனவரி 28, திரிஷாவுக்கு நெருங்கிய தோழிகள் அவருடைய கல்லூரி, பள்ளியில் படித்த சக மாணவிகள்தான். நடிகைகளில் அவருக்கு நெருக்கமான தோழி சார்மி. ஷாப்பிங், நைட் பார்ட்டி செல்வதென்றால் இருவரும் ஜோடிபோட்டு கிளம்பிவிடுவார்கள். திரிஷாவுக்கு திருமணம் என்றதும் ரொம்பவே குஷி ஆனார் சார்மி. அவரது திருமண நிச்சயதார்த்தத்தில் பங்கேற்று வாழ்த்து கூறினார்.இது பற்றி சார்மி கூறும்போது, ‘திரிஷாவை இனி ரொம்பவே மிஸ் செய்வேன். அதேசமயம் திரிஷா பேச்சுலர் வாழ்க்கையை மிஸ் செய்யப்போகிறார். அதற்கான நேரம் தொடங்கிவிட்டது‘ என்றார்.பாலிவுட்டில் நடிகர், நடிகை திருமணம் என்றால் அதில் நடிகைகளின் நடன காட்சி இடம்பெறுவது கட்டாயமாகிவிட்டது. அந்த பாணியை திரிஷா திருமண விழாவில் அரங்கேற்றி வைக்க முடிவு செய்திருக்கிறார் சார்மி. அவரது திருமண விழாவின்போது நடனம் ஆடி திரிஷா மீதான தனது பாசத்தை வெளிப்படுத்த முடிவு செய்திருக்கிறார்.