ஜனவரி 24, 68 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக இந்தியர்களின் தாய்க் கட்சியான ம.இ.கா பதிவு ரத்தாகும் அபாயத்தை தற்போது எதிர்நோக்கியுள்ளது. இது ம.இ.கா நலனில் அக்கறை கொண்டுள்ள அனைத்து உறுப்பினர்களின் உள்ளத்திலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் கட்சி அலுவலகத்தில் நுழைவதற்கு தலைமைச் செயலாளர் அவர்கள் விதித்துள்ள தேவையற்ற துணைத்தலைவர் அவர்களே தேசியத் தலைவர் அவர்களை சந்திக்க முடியவில்லை என்று வெளியாகும் செய்திகளும் ம.இ.கா உறுப்பினர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தையும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது என்கிறார் முன்னாள் மாநில அட்சிக்குழு உறுப்பினரும் ம.இ.கா அலோர்காஜா தொகுதித் தலைவரும் ‘நாம்’ இயக்கத்தின் தலைவருமான டத்தோ பெருமாள். இந்த நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டியவர் தேசியத் தலைவர். கட்சியில் எற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கின்றார்.