ஜனவரி 22, உலகெங்கும் 500 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் சமூக வலைதளமான வாட்ஸ் அப் ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து நேற்று வாட்ஸ் அப் வெளியிட்ட அறிக்கையில், மோபைலில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப்பை இனி இணையதளத்திலும் பயன்படுத்தலாம். இந்த புதிய வலைதள சேவை ஒரு கண்ணாடியை போல செயல்படும். அதாவது நமது வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் உள்ள தகவல்கள் இந்த வலைதள சேவையால் நகலெடுக்கப்படும். இதனால் வாட்ஸ் அப்பில் உள்ள உரையாடல்களும் குறுஞ்செய்திகளும் இனி எப்போதும் போனில் இருக்கும். (பேஸ்புக் போல்)
தற்போது இந்த புதிய சேவையை கூகுள் குரோம் பிரவுசரில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆப்பிள் நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக ஐபோனில் இந்த சேவையை பயன்படுத்த முடியாது.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் 22 பில்லியன் டாலர் கொடுத்து வாட்ஸ் அப்பை, பேஸ் புக் விலைக்கு வாங்கியது நினைவு கூறத்தக்கது.