ஜனவரி 20, இன்று காலை பினாங்கு மாநகர மன்றம் நடத்திய அதிரடிச் சோதனையில் லைன் கிலியர் உணவுக் கடையின் பொருட்கள் பறிக்கப்படுள்ளன.
பினாங்கு மாநிலத்திற்குப் பெயர்போன உணவுக் கடையான லைன் கிலியரை கடந்த 1947ஆம் ஆண்டுத் தொடங்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் வழி நடத்தி வருகின்றனர். இக்கடையின் உணவைச் சாப்பிடுவதற்காகவே வாடிக்கையாளர் நீண்ட வரிசையில் நின்று பொறுமையாக உணவை வாங்கிச் செல்வர்.
ஆனால் இன்று அதிகாலை நடந்த இச்சம்பவத்திலோ இக்கடையின் மேசை, நாற்காலி, மற்றும் சில சமையல் பாத்திரங்களும் பினாங்கு மாநகர மன்றத்தால் பறிக்கப்பட்டுள்ளது. இதனால் இக்கடையின் உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்
இருப்பினும் தங்களது வாடிக்கையாளர்களுக்காகவே வழக்கம் போல் இவர்கள் கடையினைத் திறந்து வியாபாரம் செய்தனர்.