என் தமிழ்

ஒரு புதிய பாதுகாப்பு நடைமுறையை அறிமுகம் செய்தார்: டத்தோ குமார் அம்மான்

logo

ஜனவரி 14, புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட டத்தோ குமார் அம்மான் மஇகா தலைமையகத்தில் கொண்டுவந்த ஒரு புதிய பாதுகாப்பு நடைமுறை எதிர்பாராதவிதமாக விஸ்வரூபம் எடுத்து வேறு திசையில் சென்று விட்டது.

இனிமேல் மஇகா தலைமையகத்திற்குள் வருபவர்கள் பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு உட்பட்டே கட்டிடத்திற்குள் நுழைய முடியும் என்ற விதிமுறைகள் குமார் அம்மனால் அறிவிக்கப்பட்டவுடனேயே அதனை எதிர்த்து கடும் கண்டனக் குரல்கள் எழுந்தன.

கடந்த சில வாரங்களாக பல பத்திரிக்கை சந்திப்புகள் – அதிலும் குறிப்பாக மஇகா தேசியத் தலைவர் பழனிவேலுவுக்கு எதிரான ஒரு சிலரின் பத்திரிக்கை சந்திப்புகள் – மஇகா தலைமையகத்திலேயே நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த புதிய பாதுகாப்பு நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.

Scroll to Top