திரங்கானு கெமாமான் பகுதிகளில் மீண்டும் வெள்ளம் மக்கள் அவதி

திரங்கானு கெமாமான் பகுதிகளில் மீண்டும் வெள்ளம் மக்கள் அவதி

rain34

ஜனவரி 9, தொடர்ந்து பெய்து வரும் கனத்த மழையால் நாட்டில் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் பல்லாயிரம் மக்கள் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து அவதிப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் இன்றைய தினங்களில் சில இடங்களில் வெள்ளம் சற்று வற்றத் தொடங்கியுள்ளது. இதனால் துயர் துடைப்பு மையங்களில் இருந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

ஆனாலும் திரங்கானு கெமாமான் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் தொடர் மழையால் மீண்டும் வெள்ளம் ஏறத் தொடங்கியுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் தொடங்கி கெமாமான் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இடைப்பட்ட சில தினங்களுக்கு முன் தொடர்ந்து பெய்து வந்த மழை நின்றதால் வெள்ளம் சற்று வற்றத் தொடங்கியது. ஆனால் தற்போது கெமாமான் பகுதியில் இரண்டாம் கட்ட வெள்ளம் ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் தொடங்கியுள்ள தொடர் மழையால் அப்பகுதியில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

அதனால் இதுவரை ஏறக்குறைய 37 குடும்பங்கள் துயர்துடைப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கெமாமான் பகுதியில் உள்ள மக்கள் இரண்டாம் கட்ட வெள்ளப் பிரச்சனையை எதிர்நோக்கவுள்ளதால் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.